சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு கல்குடா வலயக் கல்வி அலுவலகத்தில் ' எழுத்தறிவும் நீண்டு நிலைக்கக்கூடிய சமூகமும்' என்ற தொனிப் பொருளில் கொண்டாடப்பட்டது.இந் நிகழ்வானது முறைசாரக் கல்வி இணைப்பாளர் செல்வி.சீ.லோகேஸ்வரி நெறிப்படுத்தலில் கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர், செ.ஸ்ரீகிருஷ;ணராஜா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் தி.ரவி (பிரதிக் கல்விப் பணிப்பாளர்), திருமதி.ச.ரவிராஜா (பிரதிக் கல்விப் பணிப்பாளர்), திருமதி.யோ.குணரெட்ணம் (உதவிக் கல்விப் பணிப்பாளர்) என்பவர்களுடன் வை.சின்னத்தம்பி (ஒய்வு பெற்ற முறைசாரக் உதவிக் கல்விப் பணிப்பாளர்), ஆசிரிய ஆலோசகர்கள் என்போர் அதிதியாக கலந்து கொண்டனர்.



















