நேற்றுக் காலை தனியார் வகுப்பிற்கு சென்ற மாணவன் டிலக்சன் இன்னும் விடு திரும்பவில்லை என சிறுவனின் பெற்றோர் வற்றி நியூஸ் க்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து குறித்த செய்தியை வற்றி நியூஸ் இணையத்தளத்தில் வெளியிட்டிருந்தோம்குறித்த செய்தியை பார்வையிட்ட நபர் ஒருவர் செய்தியில் உள்ள புகைப்படத்தின் சாயலை உடைய சிறுவன் ஒருவன் மட்டக்களப்பு கள்ளியங்காட்டுப் பிரதேசத்தில் நிப்பதாகக்கூறி எமது இணையத்தளத்திற்கு தொடர்பினை ஏற்படுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நாம் பெற்றோரை தொடர்புகொண்டு தெரிவித்திருந்தோம் .
பின்னர் நீதிபதியிடம் ஆஜர் செய்து பொலிசில் மாணவன் ஒப்படைக்கப்பட்டு , பொலிசார் மாணவனிடம் விசாரணை செய்த பின்பு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.














