மகாத்மா காந்தி அடிகளாரின் 146வது ஜனன தினத்தையொட்டி மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி அடிகளாரின் நினைவுச்சிலைக்கு (2.10.2015) வெள்ளிக்கிழமை காலை மலர் மாலை அணிவிக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்திசேவா சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு காந்திசேவா சங்கத்தின் தலைவர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் மற்றும் அதன் செயலாளர் எஸ்.பாரதிதாசன் உட்பட அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது காந்தி அடிகளாரின் நினைவுச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டன.















