(ஜவ்பர்கான்)
மட்டக்களப்பு சிறைச்சாலையில் 9 தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்துள்ள சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.
கடந்த திங்கட்கிழமை 12 ஆம் திகதி நள்ளிரவு 12மணியளவில் இக் கைதிகள் உண்ணாவிரத போராட்டத்ததை ஆரம்பித்திருந்ததாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
பயங்கரவாத சந்தேக நபர்களான இவர்கள் கடந்த 6 வருடங்களுக்கு மேல் சில கைதிகளும் 4 மற்றும் 2 வருடங்களுக்கு மேலாகவும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளாவர்.
தங்களை விடுதலை செய்யுமாறு கோரியே இக்கைதிகள் தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூடங்களுக்குள்ளேயே சாகும்வரை உண்ணாவிரதத்தை நடாத்திவருகின்றனர்.












