கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்றதும், தொன்மை வாய்ந்ததும், சின்னக் கதிர்காமம் எனச் சிறப்பித்துக் கூறப்படுவதுமாகிய தாந்தாமலை அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலய விஷேட தேச மகாசபை கூட்டமானது எதிர்வரும் 04.10.2015ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப.10.00 மணிக்கு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய வளாகத்தில் இடம்பெறவிருப்பதாக ஆலய பரிபாலன சபையின் செயலாளர் பொ.டிமலேஸ்வரன் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஆலய முன்னேற்ற விடயங்கள் தொடர்பாக பல்வேறு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனவே அனைவரையும் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் முன்வைக்குமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.













