சமுதாயத்தின் வாழ்தலுக்கான விழிப்பை ஊட்டும் காத்திரமான திரைப்படங்கள் வெளிவருவதும் அதனைப் பார்த்து கலந்துரையாடுவதும் எம் மத்தியில் மிகக் குறைவு. இந்த வகையில் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர் சமகால சமுதாயத்தின் தேவைக்கும் அதற்கான தகவலைத்; தரும் பொருட்டும் நல்ல படங்களை திரையிட்டு கலந்துரையாடுவதும், வர்த்தகச் சினிமாவால் சமுதாயத்திற்கு ஏற்படும் தாக்கங்கள் பற்றி கலந்துரையாடல்களை மேற்கொள்வதும் வழமை.
இதன் தொடர்ச்சியாக 2014 இல் இலங்கை நோர்வே தூதரகத்தினூடாக பல பார்க்கக் கிடைக்காத அரிதான நல்ல திரைப் படங்கள் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் ஒழுங்கமைப்பில் மட்டக்களப்பில் ஒரு வருட காலமாக நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட பலர் பயனடைந்தனர். மாற்றுச் சினிமாவின் தேவை, அதன் பெறுமதி அது மக்களை விழிப்படைய வைக்கும் முறை என்பன தொடர்பாக இதனூடாகப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இதன் அடுத்த கட்டமாக, 2015க்கான “ஐரோப்பிய திரைப்பட விழா” நுண்கலைத்துறையின் ஒழுங்கமைப்பில் கிழக்குப்பல்கலைக்கழக, அழகியற் கற்கைகள் நிறுவக பிரதான மண்டபத்தில் ஐப்பசி 24, 25 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு நாளும் மூன்று மூன்று படங்கள் திரையிடப்படவுள்ளன. 24ம் திகதி சனிக்கிழமை வுhந
Black Brothers, Chair of Happens, The Theory of Every Thing ஆகிய மூன்று படங்களும், 25ம் திகதி
We are young, We are strong, Morgen, Grand Central ஆகிய மூன்று படங்களும் திரையிடப்படவுள்ளன.
இது காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடையும். இதற்கான அனுமதி இலவசம். நல்ல படங்களைப் பார்த்து
பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர்.
சு.சந்திரகுமார்,
நுண்கலைத்துறை.














