கிழக்கு மாகாணத்தில் விவசாயதுறையில் பெண்களின் தலைமைத்துவத்தை முன்னேற்றும் நோக்குடன் பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு நெல் செய்கை திட்டத்திற்காக விதை நெல் வழங்கும் நிகழ்வு இன்று (10) வவுணதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
ஒக்ஸ்பாம் நிறுவனத்தின் நிதியுதவியுடன் பிரதேச செயலாளரின் சிபாரிசுக்கமைவாக மக்கள் நலன்புரி அமைப்பு (PWA) நடைமுறைப்படுத்தலின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 3 புசல் வீகிதம் இப் பிரதேசத்திலுள்ள வவுணதீவு, மண்டபத்தடி, புதுமண்டபத்தடஆகிய கிராமங்களைச் சேர்ந்த 95 பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு இவ் விதைநெல் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு, விவசாய திணைக்கள பிரதி பணிப்பாளர் கோகுலதாசன், கமநல காப்புறுதி சபை பிரதி பணிப்பாளர் வினாயகமூர்த்தி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் நிர்மல்ராஜ், ஒக்ஸ்பாம் நிறுவன கிழக்கு மாகாண முகாமையாளர் திருமதி சுபத்திரா ஜெயக்குமார், திட்ட இணைப்பாளர் சிவாஸ்கரன், PWA நிறுவன திட்ட இணைப்பாளர் ரமேஸ் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.












