மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து வரும் 9 தமிழ் அரசியல் கைதிகளும் சோர்வடைந்த நிலையில் காணப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கவலை தெரிவித்தார்.
புதன்கிழமை காலை மட்டக்களப்பு சிறைச்சாலையில் தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிதம் இருந்து வரும் 9 தமிழ் அரசியல் கைதிகளையும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அங்கு சென்று பார்வையிட்டார்.
இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் மட்டக்களப்பு சிறைச்சாலையில் 9 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
மூன்றாவது நாளாக இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த 9 பேரில் 7 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவர் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தொிவித்தார்.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள இவர்கள் சோர்வடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.தம்மை விடுதலை செய்ய வேண்டும். எய்தவர்கள் வெளியில் சுதந்திரமாக இருக்க குற்றம் செய்யாத நாங்கள் சிறைச்சாலைகளில் வாடுகின்றோம்.
எங்களது குடும்பத்தில் மனைவி பிள்ளைகள் மிகவும் கஷ்டப்படுகின்றனர் எமது பிள்ளைகளின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளது. எமது பிள்ளைகளை கல்வி கற்க வைப்பதற்கு எம்மிடம் பணமில்லை. நாம் வௌியில் இருந்தால் ஏதாவது தொழில் செய்து உழைத்து எமது பிள்ளைகளின் கல்வி நிலையை கவனிப்போம்.
எமது விடுதலைக்காக சட்டத்தரணிகளுக்கு கொடுப்பதற்கு எங்களிடம் பணமில்லை.எனவே எம்மை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதுடன் எமது குடும்ப நிலையையும் எங்களது நிலையையும் கட்சி உயர் மட்டத்திற்கும் அரசாங்கத்தின் உயர் மட்டத்திற்கும் தெரியப்படுத்துங்கள் என தமிழ் அரசியல் கைதிகள் மன்றாட்டமாக கேட்டுக் கொண்டனர்.
இவர்களின் நிலை தொடர்பில் நான் எமது கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் எதிர்க்கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.
அத்தோடு மட்டக்களப்பு சிறைச்சாலையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள 9 தமிழ் அரசியல் கைதிகளில் 7 கைதிகள் திருமணம் செய்த குடும்பஸ்த்தினர். அவர்களின் பிள்ளைகளின் கல்விக்காக உதவுவதற்காக நடவடிக்கை எடுக்கவுள்ளேன் எனவும் இது தொடர்பாக தமிழ் தேசி யக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட
மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந் துரையாடி இவர்களின் குடும்பங்களுக்கும் அவர்களின் பிள்ளைகளின் கல்விக்காகவும் உதவவுள்ளோம் என்றார்.