இளம் புத்தாக்குனர் போட்டியில் செங்கலடி விவேகானந்தா மாணவன் தேசிய மட்டத்திற்குத் தெரிவு


இலங்கை பொறியியலாளர் நிறுவகத்தினால் வருடாவருடம் நடத்தப்படும் இளம் புத்தாக்குனர் போட்டியில் தானியங்கி நீரூற்றும் இயந்திரம் எனும் புத்தாக்கத்தைச் செய்த கல்குடா வலயத்தின் செங்கலடி விவேகானந்தா வித்தியாலய மாணவன் தேசிய மட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார். 

இவ் இளம் புத்தாக்குனர் போட்டியின் ஆரம்பப் போட்டிகள் பதுளை பொதுநூலகத்தில் நடைபெற்று, இறுதிச் சுற்றுப் போட்டி கொழும்பு விஜேயராம மாவத்தையில் கடந்த 27ஆம் திகதி நடைபெற்றது. 


இளம் புத்தாக்குனர் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா வலயத்திலிருந்து தெரிவான ஒரேயொரு மாணவன் என்ற பெருமையை ஜீவரெத்தினம் பிரதீபன் என்ற தரம் 8ல் பயிலும் இவ் மாணவன் பெறுவதாக செங்கலடி விவேகானந்தா வித்தியாயலய அதிபர் க.சிவலிங்கராஜா தெரிவித்தார்.