பாடசாலை மட்ட கால்பந்தாட்டத்தின் அரையிறுதிப் போட்டிகள் பற்றிய அறிவித்தல்



மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கமும் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகமும் இணைந்து நடத்திக் கொண்டிருக்கும் மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பத்து பாடசாலைகளின் கால்பந்து அணிகள் பங்குபற்றிய ரஞ்சித் ரொட்ரிகோ சவால் கிண்ணத்திற்கான மாபெரும் கால்பந்தாட்டப் போட்டிகளின் அரையிறுதிப் போட்டிகள் நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3:00 மணிக்கு மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முதலாவது அரையிறுதிப் போட்டியில் புனித மிக்கேல் தேசிய பாடசாலை அணியை எதிர்த்து அமிர்தகழி ஸ்ரீ சித்தி வினாயகர் வித்தியாலய அணியும், இரண்டாவது அரையிறுதியில் கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலய அணியை எதிர்த்து மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலை மட்டத்திலிருந்த கால்பந்தாட்டத்தை வளர்த்தெடுக்கும் நோக்குடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள இச்செயற்றிட்டத்திற்கு அதரவு வழங்கும் வகையில் கால்பந்தாட்ட அபிமானிகளை வருகை தருமாறு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தினர் அன்புடன் அழைக்கின்றார்கள்.