தொழில்நுட்பப் பயிற்சிநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வழிகாட்டல் கருத்தரங்கு

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரம் கற்ற, வேலையற்ற தமிழ் இளைஞர் யுவதிகளை எதிர்வரும் 2016 ஆம் கல்வியாண்டுக்காக அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் ஆரம்பிக்கப்படவுள்ள தொழில்நுட்பப் பயிற்சி பாடநெறிகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான வழிகாட்டல் கருத்தரங்கு இன்று (12) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

ஆலையடிவேம்பு பிரதேச திறன் அபிவிருத்தி உதவியாளர் வி.நடனகுமார் மற்றும் மனிதவள அபிவிருத்தி உதவியாளர் ஏ.எல்.தமீம் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் இடம்பெற்ற குறித்த வழிகாட்டல் கருத்தரங்கிற்கு அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் தொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை வழங்கல் உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.பிஸ்றீன் கலந்துகொண்டு எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில் தமது கல்லூரியில் ஆரம்பிக்கப்படவுள்ள 19 பயிற்சி பாடநெறிகள் தொடர்பாக விளக்கமளித்ததோடு, விண்ணப்பப்படிவங்களை விநியோகித்து புதிய மாணவர் பதிவுகளையும் மேற்கொண்டார்.