சிறுவர்கள் சிறந்த நற்பிரஜையாக வளர வேண்டும். சிறுவர்களை பாதுகாத்து சமூகத்திற்கு நல்ல பிரஜைகளை உருவாக்குவது பெற்றோர்களின் கடமை என்று அண்மையில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் உரையாற்றும் போது தெரிவித்தார்.
திருக்கோயில், காயத்திரி கிராமத்தில் சமூக தரிசன ஒன்றியத்தின் ஏற்பாட்டில் தலைவர் திரு.நந்தபாலு அவர்களின் தலைமையில் சிறுவர் தின நிகழ்வுகள் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டதுடன், ஓய்வுபெற்ற பிரதேச செயலாளரும், மாகாண சபை உறுப்பினரின் செயலாளருமான வி.அழகரெத்தினம் அவர்களும் கலந்து கொண்டார்.
மாகாண சபை உறுப்பினர் உரையாற்றுகையில்,
சிறுவர்கள் சிறந்த நற்பிரஜையாக வளர வேண்டும். சிறுவர்களை பெற்றோர்களே கவனமாக பாதுகாக்க வேண்டும். தற்போது சிறுவர் துஷ்பிரயோகங்களே நாட்டில் அதிகரித்து வருகின்றது. இவற்றில் எல்லாம் சிறுவர்களை பாதுகாத்து சமூகத்திற்கு நல்ல பிரஜைகளை உருவாக்குவது பெற்றோர்களின் கடமை எனவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர், புலமைப் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பரிசுப் பொருட்களை வழங்கி வைத்ததுடன், முதியவர்களும் மாலை அணிவிக்கப்பட்டு பரிசுப் பொருட்களுக்கும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வில் சிறுவர்களும், பெற்றோர்களும், முதியோர்களும் பெருமளவில் கலந்துகொண்டிருந்தனர்.