(ரேவநிசாந்) தட்சண கைலாயம் என சிறப்புற்று விளங்கும் ஈழமணித் திருநாட்டின் மட்டக்களப்பின் மண்முனை தென்எருவில் பற்று பிரேதேச பிரிவில் வாவிமகள் சூழப்பெற்றதும் ஆழ்கடல் அலை ஓசையுடன் செங்கதிரோன் சிவந்து உதிக்க செந்நெல் விளைகின்ற வயல்வெளிகள் நிறையப் பெற்றதும் ஆவினங்கள் அன்போடு பால் சொரிந்து அளவற்றசெல்வங்கள் தான் பெருக்க மா, பலா, வாழை முக்கனிகள் விளையப் பெருகின்றதுமான மகிழூர்முனை 110A கிராமம் தன்னில் மூலமூர்த்தியாய் தான் அமர்ந்து அடியவர்களின் இடுக்கண் களைந்து இன்னல்களை நீக்கி இஷ்டசித்திகளை வழங்கி கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஸ்னுபெருமான் கும்பாபிஷேக கிரியைகள் 19.10.2015 ஆரம்பமாகி இன்று 23.10.2015 வெள்ளிக்கிழமை எண்ணெயக்காப்பு சாத்தும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.
இதில் பலநூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டு எண்ணெயக்காப்பு சாத்தினர்.அது மட்டுமின்றி நாளைய தினமான 24.10.2015 சனிக்கிழமை மாலை 4மணிவரை எண்ணெய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறும். விழாவின் 7ம் நாளாகிய 25.15.2015 ஞாயிற்றுக் கிழமை தனுலக்கினமும் உத்திர ட்டாதி நட்சத்திரமும் திரயோதசி திதியும் கூடிய முற்பகல் 10.08மணிதொடக்கம் 11.50 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் மஹாகும்பாபிஷேக விழா சிறப்பாக இடம்பெற இருக்கிறது. அனைவரும் வாரீர்! இறையருள் பெறுவீர் !























