மகிழூர்முனை அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத விஷ்னு ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

(ரேவநிசாந்)  திருமுலாரல் சிவபூமி என போற்றப்பட்ட ஈழமணித் திரு நாட்டின் கிழக்குமாகாணத்தின் மீன் பாடும் தேன்நாடாம்  மட்டக்களப்பின்  மண்முனை தென்எருவில் பற்று பிரேதேச பிரிவில் வாவிமகள் சூழப்பெற்றதும் ஆழ்கடல் அலை ஓசையுடன்  செங்கதிரோன் சிவந்து உதிக்க செந்நெல் விளைகின்ற வயல்வெளிகள் நிறையப் பெற்றதும்  ஆவினங்கள் அன்போடு பால் சொரிந்து அளவற்றசெல்வங்கள் தான் பெருக்க மா, பலா, வாழை முக்கனிகள் விளையப் பெருகின்றதுமான மகிழூர்முனை 110A கிராமம் தன்னில் மூலமூர்த்தியாய் தான் அமர்ந்து  அடியவர்களின் இடுக்கண் களைந்து இன்னல்களை நீக்கி  இஷ்டசித்திகளை வழங்கி கொண்டிருக்கும்  அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஸ்னுபெருமான்  கும்பாபிஷேக நிகழ்வு 25.10.2015 ஞாயிற்றுக் கிழமை தனுலக்கினமும் உத்திரட்டாதி நட்சத்திரமும் திரயோதசி திதியும் கூடிய முற்பகல் 10.08மணிதொடக்கம் 11.50 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் மங்களவாத்தியங்கள் முழங்க மந்திர பராயன ங்களுடன் மதுசூதனுக்கு மஹாகும்பாபிஷேக விழா சிறப்பாக இடம்பெற்றது.

இதில் பலநூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டு  அரவமது பஞ்சனையாய் தான் விளங்கிடவே ஆழ்கடலில் துயில் கொண்டு அதர்மத்தை அழித்திடவே ,அவனிலே அவதாரம் பத்து எடுத்தாய். ஆண்டாள்  துதித்து நின்ற மைத்துனன் நம்பியாய்,மதுசூதனாய் மாபெரும் இதிகாசம் போற்றிநிற்கும் மகாபாரத கிருஸ்னராய், இராவணன் ஆணவத்தினை அழித்திடவே இராமனாய் அவதரித்ததய். எத்தனை நாமமம் கொண்டு எங்குமே நிறைந்த உன்னை இத்தனை நாளாய் எளியமுறையிலே வழிபட்டோம். உன்னருளாளே உள்ளன்புடனே ஊர்மக்கள் கூடி ஐயா, வானுயர்ந்த கோபுரமும், வகைவகையாய் மண்டபமும், ஆகமமுறையினுள்ளே அழகாய் அமைத்து எடுத்து கும்பத்திலே அழைத்து உன்னை விம்பத்தில் சேர்த்து விடடோம், குற்றம் குறையிருந்தால் கோவிந்தனே பொருத்தருளும்.
இந்த கும்பாபிஷேக நன்நாளில் கும்பிட்ட பக்தருக்கும், குறைசொல்லும் பக்தருக்கும் , உன்னை நம்பிவந்த பக்தருக்கும்,நன்மை செய்யும் பக்தருக்கும், உன்னையே நினைப்பவருக்கும்,உன் தொண்டு புரிபவர்க்கும் ஒரு குறையும் வையாதே மங்காத கல்வியோடு,மற்றும் பல செல்வமுடன், மகட்பேறு  தானளித்து மங்களவாழ்வு, மகிழ்வுடன் பொங்கச் செய்திடுவாய், மாயவனே மகிழூர்முனை 110A கிராமம் தனில் அமைந்த மஹா விஸ்னுப்பெருமானே என பக்தர்கள் எல்லாம் மனதிலென்னி வைகுண்டவாசனை வழிபட்டனர்.