கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் ஒழுங்கமைப்பில் 2015க்கான 'ஐரோப்பிய திரைப்பட விழா' கிழக்குப்பல்கலைக்கழக, விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பிரதான மண்டபத்தில் ஐப்பசி 24, 25 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் மூன்று திரைப் படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இன்று திரையிடப்படவுள்ள படங்கள்
1.The Black Brothers,
2.The Chair of Happiness,
3.The Theory of Everything
இன்று காலை 10 மணி, நண்பகல் 1 மணி, மாலை 4 மணி ஆகிய நேரங்களில் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதி இலவசம்.
திரைப்படங்களைப் பார்வையிடுதல், கலந்துரையாடுதல், சமகால சமூக விடயங்களுடன் தொர்புபடுத்தல் என்பன தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுத்தலுக்கான திரைப்பட விழாவாக இது அமைகின்றது. இத்திரைப்பட விழா ஒழுங்கமைப்பும் கலந்துரையாடலுக்கான இணைப்பாக்கமும் நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்களால் முன்னெடுக்கப்படுகின்றது. நல்ல படங்களைப் பார்த்து பயன்பெறுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறையினர்.
சு.சந்திரகுமார், விரிவுரையாளர்,
நுண்கலைத்துறை.
நுண்கலைத்துறை.














