(ரேவநிசாந்) உண்மையும் அறிவும் அன்புமேயாக உருக்கொண்டு அண்ட சடாச்சரமெங்கும் பாலில் நெய்போல தான் கலந்து நித்தியமாய், ஏகமாய், சிவசக்கியாய் எங்கும் வியாபித்து இருக்கும் இறைவன் ஆன்மாக்கள் தன்னை சிந்தித்து வந்தித்து, வாழ்த்தி வணங்குதற் பொருட்டு எண்ணற்ற உருவத் திருமேனிகளை கொண்டு எழுந்தருளி இருக்கின்ற அருள் நிறை இடங்களே ஆலயங்களாகும்.
இத்தகைய பெருமை பொருந்திய ஆலயங்கள் அனேகம் நிறையப் பெற்றதும் நாயன்மார்களினால் தேவராப் பாடல் பெற்ற திருத்தலங்கள் அமைந்ததும் திருமுலாரல் சிவபூமி என போற்றப்பட்ட புண்ணிய தலங்கள் நிறைந்ததுமாகிய இலங்காபுரியின் கிழக்குமாகாணத்தின் மீன் பாடும் தேன்நாடாம் மட்டக்களப்புக்கு தெற்கே மண்முனை தென்எருவில் பற்று பிரேதேச பிரிவில் வாவிமகள் சூழப்பெற்றதும் ஆழ்கடல் அலை ஓசையுடன் செங்கதிரோன் சிவந்து உதிக்க செந்நெல் விளைகின்ற வயல்வெளிகள் நிறையப்பெற்றதும் ஆவினங்கள் அன்போடு பால் சொரிந்து அளவற்றசெல்வங்கள் தான் பெருக்க மா, பலா, வாழை முக்கனிகள் விளையப் பெருகின்றதுமான மகிழூர்முனை கிராமம் தன்னில் ஆல், அரசு, மருதமர சூழ் இயற்கை தலவிருச்சங்களோடு அமையப்பெற்ற இடம்தனில் வேண்டுவோருக்கு வரம் அருளும் விநாயகப்பெருமானும், வேப்பிலை நாயகியாம் மகமாரிதாயவளும் அருகில் அமர்ந்து இருக்க மூவடியால் மூவுலகினை தான் அளந்த மாயவன் ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஸ்னுபெருமான் மூலமூர்த்தியாய் தான் அமர்ந்து அடியவர்களின் இடுக்கண் களைந்து இன்னல்களை நீக்கி இஷ்டசித்திகளை வழங்கி கொண்டிருக்கும் பாம்பணை பள்ளியுறைபவர்க்கும் பரிவார மூர்த்திகளுக்கும் ஆகம முறையில் ஆலயம் அமைக்கப்பட்டு மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் நிகழும் மன்மதவருடம் ஐப்பசித்திங்கள் 8ம்நாள் 25.10.2015 அன்று ஞாயிற்றுக்கிழமை தனுலக்கினமும் உத்திரட்டாதி நட்சத்திரமும் திரயோதசி திதியும் கூடிய முற்பகல் 10.08மணிதொடக்கம் 11.50 மணி வரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் மஹாகும்பாபிஷேக விழா சிறப்பாக இடம்பெற இருக்கிறது.
கிரியாகால நிகழ்வுகள் கர்மாரம்பம் 19.10.2015 திங்கட்கிழமை , 23.10.2015 வெள்ளிக்கிழமை 24.10.2015 சனிக்கிழமை ஆகிய இரு நாட்கள் எண்ணெயக்காப்பும், 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை மஹாகும்பாபிஷேகம் இடம்பெற இருக்கிறது. அதனைத்தொடர்ந்து பன்னிருநாட்கள் மண்டலாபிஷேகம் இடம்பெற்று 07.11.2015 சனிக்கிழமை சங்காபிஷேகம் இடம்பெற இருக்கிறது.அனைவரும் வாரீர்! இறையருள் பெறுவீர் !

















