கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு

சர்வதேச சிறுவர்கள் தின நிகழ்வையெட்டி மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கன்னங்குடா மகா வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு நேற்று 1ம் திகதி பாடசாலை அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.