முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கால்பந்தாட்டப் பயிற்சி முகாம்

 மட்டக்களப்பு முகத்துவாரம் லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தின் இளம் கால்பந்தாட்ட வீரர்களின் கால்பந்தாட்டத் திறனை மேலும் வளர்த்தெடுக்கும் நோக்குடன் லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழக நிருவாகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கால்பந்தாட்டப் பயிற்சி முகாம் நேற்றைய தினம் (ஞாயிறு) முகத்துவாரம் லைற்ஹவுஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

இப்பயிற்சி முகாமினை அம்பாறை மாவட்டத்தின் விளையாட்டு உத்தியோகத்தரும் லைற்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தின் ஆலோசகருமான திரு.வே.ஈஸ்பரன் அவர்கள் நெறிப்படுத்தி நடத்தியிருந்தார்.

இப்பயிற்சி முகாமில் சுமார் ஐம்பது இளம் வீரர்கள் பங்குபற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.