பொது மக்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய கைக்குண்டு ஒன்றையும் இரு அமுக்க வெடிகளையும் தமது உடமையில் வைத்திருந்ததாகக் குற்றஞ்சாட்டி மீன் வியாபாரி ஒருவருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் எதிரியான மீன் வியாபாரி குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி சந்திர மணிவிஸ்வலிங்கம் மேற்படி எதிரியை விடுவித்து தீர்ப்பு வழங்கினர்.
ஜனாதிபதியின் விசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அவசரகால ஒழுங்கு விதிகள் பிரிவு 36 உப பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் புரிந்ததாக குறித்த மீன் வியாபாரியான களுதாவளை சாந்திபுரத்தைச் சேர்ந்த பூபாலப்பிள்ளை உருத்திரமூர்த்தி என்பவர் மீது குற்றஞ்சாட்டி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
சம்பவ தினமான 27.09.2007 ஆம் திகதி காக்காச்சிவட்டை விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரியுடன் மேலும் மூன்று விசேட அதிரடிப்படையினரும் இரவில் களுதாவளை கடற்கரைப்பகுதியில் பதுங்கியிருந்ததாகவும் அதிகாலை 2.30 மணியளவில் குறித்த மீன் வியாபாரியான பூபால பிள்ளை உருத்திரமூர்த்தி அவ்விடத்துக்கு வந்து பிடிப்பட்ட போது தப்பியோட முயன்றதாகவும் வழக்கில் விபரம் தெரிவிக்கப்பட்டது.
இதன்போதே குறித்த நபரிடம் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவரது சாரனுக்குள்ளிருந்து இரு அமுக்க வெடிகள் விழுந்து கண்டுபிடிக்கப்பட்டதாக அக்குற்றச்சாட்டில் விபரம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி சந்திர மணிவிஸ்வலிங்கம் முன்னிலையில் நடைபெற்றபோது எதிரியான பூபாலபிள்ளை உருத்திரமூர்த்தி எதிரிக் கூண்டிலிருந்து சாட்சியமளிக்கையில் தனக்கு இக் குற்றச்சாட்டில் தொடர்பு இல்லையெனத் தெரிவித்திருந்தார்.
அதேவேளை வழக்கு விசாரணையின் போது குறித்த விசேட அதிரடிப்படைப் பொறுப்பதிகாரியுடன் பதுங்கியிருந்து மூன்று விசேட அதிரடிப்படையினரும் எதிரியிடமிருந்து கைக்குண்டு கைப்பற்றியதையோ சாரனுக்குள்ளிருந்து இரு அமுக்க வெடிகள் வீழ்ந்ததையோ தாம் காணவில்லையெனவும் இது பற்றித் தமக்குத் தெரியாதெனவும் சாட்சியமளித்தனர்.
அத்துடன் அதிகாலை 2.30 மணிக்கு பிடிபட்ட நபரை காக்காச்சிவட்டை விசேட அதிரடிப்படை முகாமுக்கே அழைத்துச் சென்று காலையிலேயே விடிந்தபின் களுவாஞ்சிக்குடி பொலிஸில் ஒப்படைத்தமையும் மன்றின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருந்தது.
மேலும் குறித்த எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட கைக்குண்டு மற்றும் அமுக்க வெடிகளைப் பொலிஸார் பாரமெடுத்ததற்கான தகவலோ அவற்றை வெடிக்க வைத்த பின்னரான மாதிரிகளோ சாட்சியமாக மன்றில் வழக்கு தொடுநர் தரப்பால் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது நீதிபதி சந்திர மணிவிஸ்வலிங்கம் தீர்ப்பு வழங்கினார்.
போலியாக குற்றம் சோடிக்கப்பட்டதற்கான சந்தேகம் முரண்பாடான சாட்சியங்கள் பற்றி குறிப்பிட்ட நீதிபதி குற்றம் சந்தேகத்திற்கப்பால் நிரூபிக்கப்படாததால் எதிரி பூபாலபிள்ளை உருத்திரமூர்த்தியைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பதாகத் தீர்ப்பு வழங்கினார்.