கதிரவெளி கனிஸ்ட வித்தியாலய ஆசிரியர் தின நிகழ்வு

(துதி)
மட்/ககு/ கதிரவெளி கனிஸ்ட வித்தியாலய ஆசிரியர் தின விழா இன்று (28) பாடசாலை அதிபர் சுப்பிரமணியம் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண அமைச்சர் துரைராசசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீநேசன், யோகேஸ்வரன் கோட்டைக் கல்வி அதிகாரி பரமேஸ்வரன் மற்றும் கல்வி சார் அதிகாரிகள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பாடசாலை அதிபர் ஆசிரியர்களுக்கு மாணவர்களால் மலர்மாலை அணிவித்து கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றதுடன் அதிதிகளுக்கும் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. மேலும் இவ்வருடம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் அவர்களால் அன்பளிப்புகளும் நினைவுச் சின்னங்களும் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.​ை

பாடசாலை அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் அதிபர் அடங்கலாக அதிதிகளிடம் மகஜர்களும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.