ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் கல்லடி- உப்போடை விவேகானந்தா மாணவி மாவட்ட மட்டத்தில் ஏழாவது இடம்

அண்மையில் வெளிவந்த ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி கல்லடி- உப்போடை விவேகானந்தா  மகளிர் மகா வித்தியாலயத்தில் தோற்றிய எட்டு மாணவிகள் புலமைப் பரிசில் பெறுவதற்கான புள்ளிகளைப் பெற்றுள்ளார்கள்;.  இதில் தார்ணி மங்களேஸ்வரன் எனும் மாணவி 183 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் ஏழாவது இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார். இவர் பொறியியலாளர் மங்களேஸ்வரன், ஆசிரியை திருமதி மங்களேஸ்வரன் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியாவார். பாடசாலை அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் அவர்களின் உயரிய வழிநடத்தல்களுக்கும் மற்றும் ஆசிரியர்களின் சிறந்த கற்பித்தல் நடவடிக்கைகளுக்கும் எமது வாழ்த்துக்கள்.