திருகோணமலையில் வீடொன்றினுள் இருந்து சடலம் கண்டெடுப்பு

திருகோணமலை – பூவரசன் தீவு பகுதியில் வீடொன்றினுள் இருந்து நேற்று சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசன் தீவு பகுதியில் ஆணொருவரின் சடலம் நேற்று (26) மாலை மீட்கப்பட்டுள்ளது.சிலர் குறித்த நபரை தேடி வீட்டிற்கு சென்றிருந்த போது வீடு பூட்டப்படிருந்தமையினால் சந்தேகமடைந்துள்ளனர்.
இதையடுத்து வீட்டினை உடைத்து பார்த்த போது குறித்த நபர் சடலமாகக் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தார்.குறித்த சடலம் ஒரு பிள்ளையின் தந்தையினுடையது என அடையாளங்காணப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறினார் .சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.