விவேகானந்தா பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வும், பரிசளிப்பு வைபபமும்....

நேற்றுமுந்தினம் செவ்வாய் அன்று (13.10.15) இடம்பெற்ற ஆசிரியர் தின நிகழ்வில் மாணவர்களினால் ஆசிரியர்களையும்  நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகளையும் ஊர்வலமாக மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 

அதனை தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆசிரியர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. 

இதன்போது “குரு பிரதிபா” விருது பெற்ற பாடசாலை அதிபர் T.ஹரிதாஸ் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. 

சமூகத்தில் நற்பிரஜைகளை உருவாக்குவதில் முன்னிலையில் இருக்கின்ற ஆசிரியர்களையும் அதிபர்களையும் கௌரவிக்கும் வகையில் மாணவர்களினால் நடத்தப்படுகின்ற நிகழ்வாகும். 

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வணக்கத்திற்குரிய கல்லடி உப்போடை இராமகிஷ்ண மிஷன் ஸ்ரீமத் சுவாமி சதுர்ப்புஜானந்தஜி மகராஜ், விசேட அதிதியாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளர் ஆர்.ஜெகநாதன் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், அதிபர்கள் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு  சிறப்பித்தனர்.

இதன்போது  அதிதிகளினால் தரம் 5 புலமை பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது