அம்பாறை மாவட்ட பாணமைக் கிராமத்திற்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை (11.10.2015) அன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் நேரடியாக விஜயம் மேற்கொண்டு அங்கு வாழும் தமிழ் மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் அந்த கிராமத்து தமிழ் மக்களிடம் அவர்களது குறை நிறைகளை கேட்டறிந்து கொண்ட மாகணசபை உறுப்பினர். அந்த மக்களில் பெரும்பாலானவர்கள் மீன்பிடித் தொழிலை பிரதான தொழிலாக கொண்டிருக்கின்றனர். கிழக்கு மாகாண மீன்பிடித்துறை அமைச்சர் அவர்களை இந்த கிராமத்திற்கு அழைத்து வருவதற்கு ஏற்ற நடவடிக்கை எடுப்பதாக மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் வாக்குறிதியளித்தார்.
அத்துடன் தனது அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் சுயதொழிலுக்காக பெயர்ப்பட்டியல் தயாரிக்குமாறும் கேட்டுக் கொண்டார். அத்துடன் இச் சந்திப்பில் மாகாண சபை உறுப்பினரின் பிரத்தியேக செயலாளரான திரு.வ.அழகரெத்தினம் அவர்களும் கலந்து கொண்டார்.