புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் மாவடிவேம்பு விக்னேஷ்வரா வித்தியாலய மாணவன் சித்தி

-டினேஸ்-
இம்முறை நடைபெற்று முடிந்த தரம்-5 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை  பரீட்சைப் பெறுபேறுகளில் நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளில் மாணவர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர்.

அவ்வகையில் மட்/ககு/மாவடிவேம்பு விக்னேஷ்வரா வித்தியாலய மாணவனான  சிவஞானம் டிலக்சன் 153 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார். இவர் திருமதி.ரேணுகாமணிவண்ணன் ஆசிரியையின் மாணவரும், திரு.திருமதி.சிவஞானம்.சிவகாமிதம்பதிகளின் புதல்வனுமாவார்.

இம் மாணவனுக்கு  பாடசாலைஅதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து  இவ்வாறே தொடர்ந்து கற்றல் நடவடிக்கையில் ஈடுபட தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.