
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலய அதிபர் மூன்றாவது முறையாக கல்வி அமைச்சினால் வழங்கப்படுகின்ற ஜனாதிபதி விருதான 'ஆசிரியர் பிரதிபா பிரபா' விருதினை அண்மையில் பெற்றுகொண்டார்.
மட்/மமே/பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தின் கடமை நிறைவேற்று அதிபராக கடமையாற்றிவரும் மட்டிக்களியை பிறப்பிடமாகவும், ஆரையம்பதியை வசிப்பிடமாகவும் கொண்ட சுகுணதாஸ் ரவிசங்கர் கல்வி அமைச்சினால் அதிபர்,ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற ஜனாதிபதி விருதான 'ஆசிரியர் பிரதிபா பிரபா' விருதினை இவ்வருடமும் பெற்றுக்கொண்டார்.
இவர் இவ்வருடத்துடன்(2015) தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் இவ்விருதினை பெற்று சாதனை புரிந்துள்ளார்.
இவரதுபணி மேலும் தொடரவேண்டும் என இவரை, அப்பிரதேச கல்விச் சமூகத்தினர் வாழ்த்தினை தெரிவித்துள்ளனர்.













