வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களுக்கான சம்பள நிலுவை ல் ஒரு பகுதி வழங்கிவைப்பு!

(விசேட நிருபர்)
வாழைச்சேனை காகித ஆலை ஊழியர்களுக்கான 2015 ஆம் ஆண்டிற்கான சம்பள நிலுவைக் கொடுப்பனவு வெள்ளிக்கிழமை ஆலை முகாமையினால் வழங்கப்பட்டது.

தங்களது சம்பள நிலுவையை வழங்கக் கோரி கடந்த செப்ரம்பர் 18 ஆம் திகதி தொடக்கம் கடதாசி ஆலைக்கு முன்பாக அமைதியான முறையில் நடாத்தி வந்த ஆர்பாட்டம்19 நாட்களாக தொடர்ந்து நீடித்து வந்தது.

 ஆலை ஊழியர்களின் கோரிக்கைக்கு தீர்வு கானும் முகமாக கடந்த 07.10.2015 ஆம் திகதியன்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் மேலதிக செயலாளர் குசும் பியரத்ன.கடதாசி ஆலையின் பொதுமுகாமையாளர் அணுர ரணவீர ஆகியோர்கள் ஊழியர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது 2015 ஆம் ஆண்டிற்கான யூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களுக்கான சம்பள நிலுவையில் முற்பணமாக ஊழியர்களுக்கு 6000 ரூபா வழங்குவதாக தெரிவித்து அப்பணம் 10.10.2015 இல் வழங்கப்பட்டதாகவும் ஆலையின் தொழிற்சங்க தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இதனையடுத்து மீதிப்பணம் திறைசேரியின் அனுமதியுடன் இரண்டு வார காலத்திற்குள் பெற்றுத்தருவதுடன் மற்றும் ஊழியர்களுக்கான சுயவிருப்ப கோரிக்கையை எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைவதற்குள் நிறைவேற்றி தருவதாக கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.


இதனையடுத்து தங்களுக்கான சம்பள நிலுவை வழங்கப்பட்டுள்ளதாகவும் 2014 ஆம் ஆண்டிற்கான மார்ச்.ஏப்ரல் மாதங்களுக்கான சம்பள நிலுவை இது வரை வழங்கப்படவில்லையெனவும் காகித ஆலை ஊழியர்கள் தெரிவித்தனர்.  சம்பள நிலுவையினை பெற்றுக் கொண்டு மகிழ்சியடைந்த ஆலை ஊழியர்கள் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஸாட் பதூர்த்தீன் அமைச்சின் செயலாளர் தென்னக்கோன், மேலதிக செயலாளர் குசும் பியரத்ன.கடதாசி ஆலையின் பொதுமுகாமையாளர் அணுர ரணவீர ஆகியோர்களுக்கும் ஊடகங்களுக்கும் தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.