மலசலகூட குழியில் விழுந்து நான்கு வயது சிறுமி பலி

(ஷமி.மண்டூர்) காத்தான்குடி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி 6 ஜன்னத் மாவத்தையில் பாத்திமா ராஜ 4 வயது சிறுமி 30 வெள்ளி அன்று புதிதாக கட்டப்பட்ட மல சல கூட குழியில் விழுந்து மரணமடைந்துள்ளார்.

மேலும் சம்பவம் பற்றி தெரியவருவதாவது தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி  நீர் நிரம்பிய மல சல கூட குழிக்குள் விழுந்து கிடந்தததை அவதானித்த உறவினர்கள் உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்

சம்பவம் பற்றி விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்