என்னை நன்­றாக படம் எடுத்­துக்­கொண்டு த. தே.கூ. இடம் அதனைக் காட்டுங்கள். அவர்கள் சந்­தோ­ஷப்­ப­டுவார்கள்

என்னை நன்­றாக படம் எடுங்கள். எடுத்­துக்­கொண்டு ரீ.என்.ஏ.யிடம் (தமிழ் தேசிய
கூட்­ட­மைப்பு) அதனைக் காட்டுங்கள்.
அவர்கள் சந்­தோ­ஷப்­ப­டுவர் என முன் னாள்
கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் சிவ­னே­ச­துரை சந்­தி­ர­காந்தன் (பிள்­ளையான்)
நேற்று நீதி­மன்ற வளாகத்தில் வைத்து குறிப்­பிட்டார்.


முன்னாள் பார­ளு­மன்ற உறுப்­பினர் ஜோஸப் பர­ரா­ஜ­சிங்கம் படு­கொலை தொடர்பில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் கடந்த ஞாயி­றன்று மாலை கைது செய்­யப்­பட்ட பிள்­ளையான் நேற்று நீதிமன்ற வளாகத்திற்கு வந்தபோதே மேற்கண்டவாறு ஊடகவியலாளர்களிடம் கூறினார்.

பிள்ளையான் நேற்று பிற்­பகல் 1.00 மணி­ய­ளவில் புதுக்­கடை முதலாம் இலக்க நீதிவான் நீதி­மன்றின் நீதி­பதி கிஹான் பிலப்­பிட்­டிய முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு தொடர்ந்து தடுத்து வைத்து விசா­ரிப்­ப­தற்­கான அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டது.
நீதி­வானின் உத்­தி­யோ­க­பூர்வ அறையில் சட்­டத்­த­ர­ணிகள், குற்றப் புல­னாய்வுப் பிரிவு அதி­கா­ரிகள் பிள்­ளையான் ஆகியோர் மட்டும் இருக்க தடுப்புக் காவல் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.
இத­னை­ய­டுத்து திறந்த நீதி­மன்ற பகு­திக்கு பிள்­ளையான் அழைத்து வரப்­பட்ட நிலையில் அங்கு அவ­ரது சட்­டத்­த­ர­ணியால் அவ­ருக்கு ஆலோ­ச­னைகள் வழங்க­ப்­பட்­டன.
' எதிர்­வரும் நவம்பர் 4 ஆம் திகதி உங்­களை இதே மன்றில் முன்­னிலைப் படுத்­துவர். அப்­போது நாம் வருவோம். ஒன்றும் பயப்­பட தேவை­யில்லை. உங்கள் உற­வி­னர்­க­ளுக்கு சனிக்கிழமை உங்­களை பார்­வை­யி­டலாம். உணவும் கொண்­டு­வந்து தரலாம் என இதன் போது அந்த சட்­டத்­த­ரணி பிள்­ளை­யானிடம் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கைவி­லங்­கி­டப்­பட்ட பிள்­ளையான் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் நீதி­மன்­றத்­துக்கு வெளியே அழைத்து வரப்­பட்டார். இதன்­போது மன்றின் புதுக்­கடை நீதி­மன்ற வளா­கத்தின் பிர­தான வாயிலை பிள்­ளையான் அடைந்த போது அங்­கி­ருந்த புகைப்­படப் பிடிப்­பா­ளர்கள் அவரை புகைப்படம் எடுத்­தனர்.
இதன்­போது தனது விலங்­கி­டப்­பட்ட கைகளை சற்று உயர்த்தி ' நன்­றாக படம் எடுங்கள்... எடுத்துக் கொண்டு போய் ரீ.என்.ஏ.விடம் காட்டுங்கள்.. அவர்கள் மிக்க சந்தோஷப்படுவர்..' என தெரிவித்தவாறு அவர் புலனாய்வுப் பிரிவின் வாகனத்தில் ஏறிச் சென்றார்.