திருட்டுச் சம்பவம் தொடர்பில் மூன்று பொலி­ஸா­ருக்கு கடூ­ழிய சிறை

திருட்டுச் சம்­பவமொன்று தொடர்­பான வழக்கில் ­குற்றம் நிரூ­பிக்­கப்­பட்­டதால் இரு பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­க­ளுக்கும் ஒரு பொலிஸ் சார­திக்கும்
மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்றம் இரு­வ­ருட கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையும் தண்­டமும் விதித்து தீர்ப்பு வழங்­கி­யுள்­ளது.
மட்­டக்­க­ளப்பு மேல் நீதிமன்ற நீதி­பதி சந்­தி­ர­மணி விஸ்­வ­லிங்கம் இத்­தீர்ப்­பினை வழங்­கி­யுள்ளார்.

குற்­ற­வா­ளி­க­ளாக மேற்­படி மூவ­ருக்கும் விதிக்­கப்­பட்ட தலா இரு வருட கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையில் கட்­டா­ய­மாக ஆறு­மாத கால கடூ­ழிய சிறைத்தண்­ட­னை­யை அனு­ப­­விக்க வேண்­டு­மெ­னவும், ஏனைய தலா 18 மாதங்­களும் பத்து வரு­டங்கள் ஒத்­தி­வைக்­கப்­பட்ட கடூ­ழிய சிறைத்­தண்­ட­னை­யா­கவும் நீதி­பதி தீர்ப்பில் தெரி­வித்தார்.
மட்­டக்­க­ளப்பு பொலிஸ் நிலை­யத்தைச் சேர்ந்த பிரே­ம­திலக, ஜொஹான் ­ரூ­ப­சிங்க ஆகிய இரு பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­க­ளுக்கும் லால் ஞானா­னந்த எனும் பொலிஸ் சார­திக்கும் எதி­ராக திருட்டுக் குற்றம் சாட்டி சட்­டமா அதி­பரால் மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றத்தில் வழக்குத் தொட­ரப்­பட்­டி­ருந்­தது.
பட்­டிப்­பளை கொக்­கட்டிச்சோலைப்­பி­ர­தேசம் யுத்­தக்­கா­லத்தில் இரா­ணுவ நட­வ­டிக்கை மூலம் மீட்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அங்கு பொலிஸ் நிலையம் ஒன்றை அமைப்­ப­தற்­கான ஆரம்ப நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்ட சம­யமே குறித்த திருட்டுச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.
கொக்­கட்டிச்சோலை பிர­தேச செய­ல­கத்தில் பொருத்­தப்­பட்­டி­ருந்த குளி­ரூட்டி இயந்­திரம் ஒன்றும் அதே பிர­தேச செய­லக சமுர்த்தி அலு­வ­ல­கத்தில் பொருத்­தப்­பட்­டி­ருந்த மூன்று மின்­வி­சி­றி­களும் திரு­டப்­பட்ட சம்­பவம் தொடர்­பி­லேயே குறித்த மூவர் மீதும் குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.
மேற்­படி திரு­டப்­பட்ட பொருட்கள் மட்­டக்­க­ளப்பு பொலிஸ் நிலைய பொலிஸார் தங்கும் விடு­தியில் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­மையும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.
சம்­பவம் தொடர்பில் வழக்கு விசா­ர­ணை­யின்­போது குறித்த பிர­தேச செய­லாளர் மற்றும் சமுர்த்தி முகா­மை­யாளர் ஆகியோர் சாட்­சி­ய­ம­ளித்­த­துடன் கைவி­ர­ல­டை­யா­ளங்­களும் சமர்ப்­பிக்­கப்­பட்டு ஆரா­யப்­பட்­டன. அத்­துடன் பொலிஸ் சாட்­சி­யமும் அளிக்­கப்­பட்­டது.
மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்­றத்தின் மேல் நீதி­மன்ற நீதி­பதி சந்­தி­ர­மணி விஸ்­வ­லிங்கம் முன்­னி­லையில் குறித்த திருட்டுக் குற்­றச்­சாட்டு வழக்­கு­வி­சா­ரணை நடை­பெற்­ற­போது சந்­தேக நபர்­க­ளான மூன்று பொலி­ஸாரும் குற்­றத்தை மறுத்து வந்­தனர்.
எனினும் தண்­டனைச் சட்­டக்­கோ­வையின் கீழ் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு தொட­ரப்­பட்ட இந்த வழக்கு விசா­ர­ணையின் சாட்­சி­யங்­க­ளின்­படி சந்­தே­க­மில்­லாமல் குறித்த மூவர் மீதான திருட்டுக் குற்றம் நிரூ­பிக்­கப்­பட்­டது.
இத­னை­ய­டுத்துக் கடந்த வியா­ழக்­கி­ழமை மேல் நீதி­மன்ற நீதி­பதி சந்­தி­ர­மணி விஸ்­வ­லிங்கம் தீர்ப்பு வழங்­கினார்.
நாற்­பது பக்­கங்­களைக் கொண்ட தீர்ப்பை வாசித்த நீதி­பதி சந்­தி­ர­மணி விஸ்­வ­லிங்கம் மூன்று பொலி­ஸா­ரையும் குற்­ற­வா­ளி­க­ளாகக் கண்டு தீர்ப்­ப­ளித்தார்.
இதன்­படி மூவ­ருக்கும் தலா இரு­வ­ருட கடூ­ழிய சிறைத்­தண்­ட­னையும் தலா பத்­தா­யிரம் ரூபா தண்­டமும் விதிக்­கப்­பட்­டது.
அத்துடன் இருவருட சிறைத் தண்டனையில் கட்டாயம் ஆறுமாத கடூழிய சிறைத்தண்­ட­னையை அனுப விக்க வேண்டுமெனவும் ஏனைய தலா 18 மாதங்களும் பத்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட கடூழியசிறைத் தண்டனையாகவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவித்தார்.
தண்டம் செலுத்தத் தவறினால் தலாமூன்று மாதங்கள் சாதாரண சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமெனவும் தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டது.