உயர் தொழிநுட்ப கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கதிரவன்

திருகோணமலை உயர் தொழிநுட்ப கல்லூரி கணக்கியல் மாணவர்கள் இன்று சனிக்கிழமை 31.10.2015 மதியம் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டார்கள்.  கடந்த புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிசார் மாணவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தே இப்போராட்டம் நடத்தப்பட்டது.


திருகோணமலை அநுராதபுரம் வீதியில் வரோதயநகர் என்னும் இடத்தில் அமைந்துள்ள உயர் தொழிநுட்ப கல்லூரி வாயிலில் பிரதான வீதியில் இப்போராட்டத்தை நடத்தினார்கள்.

நிலமைகளை சமாளிக்க பெருமளவிலான பொலிசாரும் அங்கு குவிக்கப்பட்டு இருந்தார்கள். உப்புவெளி பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள்.