நுண்கலைத்துறைத் தலைவர் கலாநிதி வ.இன்பமோகன், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர், விரிவுரையாளர் திரு ச.சந்திரகுமார் ஆகியோரின் தலைமையில் கூத்துச் செயற்பாடு பற்றி பேசப்பட்டு விரிவுரையாளர்கள; மாணவர்கள், அண்ணாவியார் போன்றோரின் கருத்துக்யமைவாக அலங்காரரூபன் தென்மோடிக்கூத்தினை ஆடுவதாக தீர்மானிக்கப்பட்டு பாரம்பரியமான முறையில் மாணவர்களுக்கு பழக்கப்பட்டது.
மாணவர்களாகிய நாங்கள் கூத்தினைப் பழகி ஆடுவதற்கு தயாராகியதோடு பல ஊர்களில் நிகழ்ந்த கூத்துக்களையும் பார்வையிட்டோம். இக் கூத்துக்களில் உள்ள ஆட்டமுறைகளையும் பாடல்இசைகளையும் பார்த்தும் கேட்டும் அறிந்துகொண்டோம். நுண்கலைத்துறைக் கட்டிடத்திற்குப் பின் உள்ள களரியிலே பழகுவதற்குத் தயாராகினோம்.
வே.தம்பிமுத்து அண்ணாவியாரே இக் கூத்திற்கு அண்ணாவியாராக இருந்தார். அவர்களுக்கு உதவியாக கு.பிரபாகரன் ஆசிரியர், வி.கோடீஸ்வரன், சி.கேதீஸ்வரன் போன்றோரும் செயற்பட்டனர். முதலாவதாக பாரம்பரியமான முறையிலே சட்டம் கொடுத்தல் நிகழ்வு இடம் பெற்றது. இதில் கூத்திலுள்ள பாத்திரங்களுக்கு ஏற்றவகையிலே அண்ணாவியாரால் மாணவர்கள் உரிய பாத்திரத்திற்கு தெரிவுசெய்யப்பட்டனர். இக் கூத்துச் செயற்பாட்டிற்கு பொறுப்பாசிரியராக விரிவுரையாளர் ச.சந்திரகுமார் அவர்கள் செயற்பட்டார்.
பெரும்பாலும் ஊர்களிலே ஆடப்படும் கூத்துக்களில் ஆண்களே அனைத்துப் பாத்திரங்களையும் தாங்கி ஆடுவது வழமை. ஆனால் பல்கலைக்கழகத்திலே பெண்கள் ஆண்பாத்திரங்களையும் பெண்பாத்திரங்களையும் தாங்கி ஆடியதோடு கொப்பி பார்க்கும் ஆற்றலையும் வளர்த்துக்கொண்டனர். இக் கூத்திலே ஆண்பாத்திரத்தை பெண்கள் ஆடியது மட்டுமல்லாது பெண்கள் களரியில் ஆடுவது வரவேற்பைத் தந்ததுடன் பால்நிலை சமத்துவத்தை ஏற்படுத்தியது. இக் கூத்தினை ஊருக்குள் நிகழ்த்தியபோது இக் கருத்தியல் மேலும் வலுவுள்ளதாக அமைந்தது. சான்றாக மாமாங்கக்கோயிலில் நிகழ்ந்தமையினைக் குறிப்பிடலாம்.
இக் கூத்தானது எட்டு மாதங்கள் பழக்கப்பட்டு பாரம்பரியமானமுறையிலே சதங்கையணி விழாவும் சிறப்பாக இடம் பெற்றது. இதில் சதங்கையணிந்து ஆடுவது முதன்முறையாக இருந்ததோடு தங்கள் பாத்திரத்தினை சிறப்பாகச் செய்யவேண்டும் என்;ற மனநிலையிலே இருந்தனர். இதன் தொடர்ச்சியாக அரங்கேற்றவிழா பல்கலைக்கழக மைதானத்திற்கு அருகாமையில் மாலை ஏழு மணியளவில் அரங்கேற்றப்பட்டது. இப் பெருவிழாவிற்குப் பீடாதிபதிகள்இ கலைப்பீட மாணவர்கள; விரிவுரையாளர்கள; பெற்றோர்கள் மட்டுமல்லாது ஏனைய கலாசாரபீட விரிவுரையாளர்கள் மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கூத்து நடைபெறுவதற்கு களரி என்பது முக்கியமானதாகும். தமிழர் பாரம்பரியப் பண்பாட்டு அடையாளமாக வட்டக்களரி விளங்குகின்றது. இது திறந்த வெளிக்குரிய கூத்தரங்கு மனிதரின் வாழ்தலைத் தன்னகத்தே கொண்டது. இக்களரியானது வட்டவடிவில் அமைந்திருப்பது சிறப்பானதாகும். களரி அமைக்கும் போது அதன் மகத்துவத்தை அறியக்கூடியதாக இருந்தது. வட்டவடிவமாக அமைத்தல் எனும்போது கூத்தினுடைய பாடல்கள் ஆடல்கள் வட்ட ஒழுங்கு முறையில் அதன் தாற்பரியத்தை வெளிக்காட்டுவது மட்டுமல்லாது சமுகமானது வட்டவடிவ அமைப்பிலே இருந்து பார்த்ததன் காரணமாகவும் கூத்தரங்கு வட்டவடிவமானது.
களரியினுடைய வேலைப்பாடுகள் சிறப்பானதாகும். அந்தவகையில களரியின் மேலே கட்டப்படும் சேலைகளின் அழகு கட்டப்பட்ட விதம; கம்புகள் நடப்பட்டு அதில் சேலை சுற்றிய விதம் களரியினுள் மண் நிரப்பப்பட்டிருத்தல் களரியைச் சற்றி வாழைக் குற்றி நடப்பட்டு அதன் மேல் தேங்காய்ப்பாதியில் எரியுட்டப்பட்டிருக்கும் இவ்வாறான ஒரு புதுரசனை மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.
கூத்துச் செயற்பாட்டிலே கூடி வேலை செய்தல் என்பது சிறப்பானதாகும.; கூத்து ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அரங்கேற்றம் வரையிலும் இது தொடர்கிறது. இங்கு முகாமைத்துவப் பண்பு விட்டுக்கொடுப்புஇ பொறுமை போன்ற பண்புகள் ஏற்படுத்தப்படுவதுடன் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது.
ந.தர்சினி
நுண்கலைத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்.