(ஹுஸைன்)இலங்கை அஞ்சல் சேவையாளர்களின் 26 தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ரீதியில் கவன ஈர்ப்பு சுகயீன லீவுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைக்கப்பட்ட தபால் தொழிற் சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
அஞ்சல் சேவையாளர்களுக்கான உரிமைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை இந்த கவன ஈர்ப்புப் போராட்டம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 26 தொழிற் சங்கங்கள் இந்த சுகயீன லீவுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மட்டக்களப்பிலும் ஊழியர்கள் சுகயீன லீவுப் போராட்டத்தை நடாத்துகின்றனர்.
இன்றைய தினம் கொழும்பு அஞ்சல் தலைமையகத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஜனாதிபதி செயலகம் வரை பாதயாத்திரையாகச் சென்று ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்படவுள்ளதாக தொழிற் சங்கங்களின் சமாச அழைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.












