கைதிகளின் விடுதலை நல்லாட்சியில் இனப்பிரச்சினை தீர்விற்கான ஆரம்பம் : ஸ்ரீநேசன் எம்.பி

(சிவம் )

கடந்த 10 நாட்களாக மட்டக்களப்பு சிறயில் இருந்த 10 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது போன்று முழுமையாக விடுவிக்கப்படுமிடத்து இனப்பிரச்சினை தீர்விற்கான ஆரம்ப நிலை என கருதவேண்டீயள்ளது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாழுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சிறையில் இருந்த 10 தமிழ் அரசியல் தைதிகளுக்கு இளநீர் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்த பின் அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது



கைதிகளின் விடுதலை விடயத்தில் இறுக்கமான நிலை காணப்பட்டால் நல்லாட்சியில் இனப்பிரச்சினை தீர்வு எவ்வாறு என்கின்ற சந்தேகம் வருவதற்கான வாய்ப்புள்ளது.

சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் 217 பேரில் இதுவரையில் 40 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு புனர்வாழ்வைக் கோராத போதும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைகளில் இருந்த 90 கைதிகள் புனர்வாழ்வளித்து விடுதலைசெய்யுமாறு கோரி கையொப்பமிட்டுக் கொடுத்துள்ளார்கள்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம். சுமந்திரன் ஆகியோர் நேற்றிரவுவரை கூடிபேசியபோது எடுத்த தீர்வுக்கமைய படிப்படியாக கைதிகள் விடுதலை பெறுவார்கள் என நினைக்கின்றேன் எனத் தெரிவித்தார்.