(சிவம்)
சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபாய் 250 மில்லியன் செலவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையின் மூன்று மாடிக் கட்டிடத்தை சுகாதார அமைசர் வைத்தியக் கலாநிதி ராஜித சேனாரட்ன இன்று வெள்ளிக்கிழமை (13) திறந்து வைத்தார்.
திறக்கப்பட்ட வைத்தியசாலையில் 72 பேர் தங்கி இருந்து சிகி;ட்சை பெறக்கூடிய வசதிகள், வெளி நோயாளர் பிரிவில்
புற்றுநோயாளர்களுக்கு சிகிட்சையளிக்கும் வசதிகள் , மாதாந்த கிளினிக் நடத்துவதற்கான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் ஐ..எல். இப்றாலெவ்வை தெரிவித்தார்.
இதேவேளை ரூபாய் 67 மில்லியன் செலவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட நிர்வாகக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டதுடன் வளாகத்தில் ரூபாய் 900 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் விபத்து மற்றும் அவசர சிகிட்சைப் பிரிவு நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லும்; நாட்டப்பட்டது.
சுகாதார பிரதியமைச்சர் பைஸர் காசிம், ஸ்ரீ லங்கா டெலிகொம் தலைவர் குமாரசிறி சிறிசேனா, புனர்வாழ்வு புனரமைப்பு மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கிழக்கு மாககாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபைர், வைத்தியசாலையின் பணிப்பாளர் ஐ. எல். இப்றாகிம் லெவ்வை ஆகியோர் கலந்து கொண்டனர்.
சுகாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் ரூபாய் 250 மில்லியன் செலவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட புற்றுநோய் வைத்தியசாலையின் மூன்று மாடிக் கட்டிடத்தை சுகாதார அமைசர் வைத்தியக் கலாநிதி ராஜித சேனாரட்ன இன்று வெள்ளிக்கிழமை (13) திறந்து வைத்தார்.திறக்கப்பட்ட வைத்தியசாலையில் 72 பேர் தங்கி இருந்து சிகி;ட்சை பெறக்கூடிய வசதிகள், வெளி நோயாளர் பிரிவில்