ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவூப் ஹகீம் மற்றும் கிழக்குமாகாண முதலமைச்சர் செய்னுலாப்தின் நஸீர் அஹமட் ஆகியோர் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர் அவர்களை சந்தித்து நல்லிணக்கம் மற்றும் வடகிழக்கு மீள்குடியேற்றம் சம்பந்தமாக கலந்துரையாடியதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் ஏற்பாட்டில் அமெரிக்க தூதுவர் சமந்தா பவரிற்கு சனிக்கிழமை இரவு வெளிவிவகார அமைச்சில் வைத்து வரவேற்பு விருந்துபசாரமொன்று வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போதே அமெரிக்க தூதரான சமந்தா பவருடன் அமைச்சர் றவூப் ஹக்கீம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்கள்.
ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்கத் தூதர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு சனிக்கிழமை மாலை இலங்கை வந்தடைந்தார்.












