(பிரசாந்)
கல்குடா வலயக் கல்வி அலுவலக வளாகத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஞான விநாயகர் ஆலயத்திற்கு விநாயகர் விக்கிரகம் பிரதிஷ்டை செய்ப்பட்டு கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து விநாயகர் விக்கிரகம் எடுத்து வரப்பட்டு அதற்கான பூசைகள் நடைபெற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. அத்தோடு விநாயகருக்கான எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.
இப்பூசை நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், வலய பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், வலய ஊழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டு எண்ணெய் காப்பு சாத்தி பூசையில் கலந்து கொண்டனர்.

























