திருமதி.கிருபராணி மாரிமுத்து ஆசிரியை அவர்களுக்குப் பாராட்டு! இந்துக்கல்லூரியின் வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஆளுமை

(ஜெ.ஜெய்ஷிகன்)
திருமதி.கிருபராணி மாரிமுத்து ஆசிரியை அவர்களின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை பாடசாலையின் அதிபர் திரு.ஜெயஜீவன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தரம் 12, விஞ்ஞானப்பிரிவு மாணவர்களால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கணிதபாடத்தை மிகச்சிறப்பாக கற்பித்து தாய்ப் பாடசாலையான இந்துக்கல்லூரியின் வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஆளுமை அவர். “ஒரு தேசத்தின் தலைவிதியை வகுப்பறைகள் நிர்ணயிக்கின்றன.” என்ற பொன்னெழுத்துகளுக்கு மதிப்பை வழங்கியவர்கள் ஆசிரியர்களே. “ஒரு குழந்தையின் முதல் ஆசிரியராக பெற்றோர்இ இரண்டாவது பெற்றோராக ஆசிரியர்”. என்ற வைர வரிகள் மாதா, பிதா, குரு போன்றோரின் சிறப்புகளைப் பட்டியலிடுகின்றன. ஆசிரியர் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் மாணவர்களை கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் அதீத அக்கறை காட்டி போதித்து சிறந்த ஆசிரியராக அறியப்பட்டவர். 

அவரைப் பாராட்டி காலை நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கல்குடா வலயக்கல்வி அலுவலகத்தைச் சேர்ந்த கணித பாடத்திற்கான உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.பெ.தோ.அமலதாஸ், சேவைக்கால ஆலோசகர் பொ.குகதாசன், பாடசாலையின் உப அதிபர் திருமதி.அருந்ததி சுந்தரமூர்த்தி ஆகியோர் திருமதி.கிருபராணி மாரிமுத்து ஆசிரியை அவர்களின் சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சிலாகித்துப் பேசுவதையும் மாணவர்கள் கேக் வெட்டி அன்பைப் பகிர்ந்து கொள்வதையும் நினைவுப் பரிசில் வழங்குவதையும் படங்களில் காண்க.