பொய் களைந்தெழுக! தீபாவளி சிறப்புக் கவிதை: கலாநிதி. சி.ஜெயசங்கர்

யாரது நன்மைக்கு
நாரத கலகங்கள்?!

நாரத வீணையின்
பார்ப்பனப் புனைவுகள்
புத்தியில் அகல

இராவண வீணையின்
மீட்டல்கள் அதிர்க

புதையுண்ட பூர்வீகப் பார்வைகள்
புதுப்புனல் நீராடி மிளிர்க

புராதனத்துப் பறையும் வீணையும்
காலிலும் தலையிலும் வைத்து
மிதித்தும் துதித்தும் கழிந்த
நூற்றாண்டுகள்
கழிக

புராதனத்துப் பறை முழங்க
இராவண வீணையின் 
மீட்டல்கள் அதிர்க

புதையுண்ட பூர்வீகப் பார்வைகள்
புதுப்புனல் நீராடி மிளிர்க

கலாநிதி.சி.ஜெயசங்கர்
கிழக்கு பல்கலைக்கழகம்.