மட்டு நகரில் இன்று பிற்பகல் பாடசாலை கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டி


மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கமும் மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகமும் இணைந்து பாடசாலைகளுக்கிடையில் நடத்திய 17 வயதிற்குட்பட்ட அணியினருக்கான கால்பந்தாட்டச் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும் பரிசளிப்பு விழாவும் மற்றும் A பிரிவு SUPER LEAGUE பரிசளிப்பு வைபவமும்  இன்று பிற்பகல் 3:00 மணிக்கு மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இப்போட்டியில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி அணியை எதிர்த்து அமிர்தகழி ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய அணி போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத்துடன் 2015 ஆம் வருடத்திற்கான மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தின் A பிரிவு SUPER LEAGUE போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு வைபவமும் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத் தலைவர் சூ.உதயராஜ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இன்றைய நிகழ்ச்சிக்குப் பிரதம அதிதியாக இலங்கை கால்பந்தாட்டச் சங்கத்தின் தலைவர் V.G.அனுர டி சில்வா அவர்களும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் K.பாஸ்கரன், மாநகர ஆணையாளர் M.உதயகுமார் ஆகியோரும், கௌரவ அதிதிகளாக மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன், உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் V.லவகுமார், மண்முனை வடக்கு உதவிப் பிரதேச செயலாளர் S.யோகராஜா, அம்பாறை மாவட்ட விளையாட்டு அதிகாரி வே.ஈஸ்பரன், சட்டத்தரணி வி.வினோபா இந்திரன், அதிபர் எஸ்.சுந்தரமோகன் ஆகியோரும் வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்டச் சங்கத்தினரால் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 ஸ்ரீ சித்தி விநாயகர் வித்தியாலய அணியினர் 


மத்திய கல்லூரி அணியினர்