சிறுகைத்தொழில் முயற்சியாளர்களுக்கு உதவிக்கொடுப்பனவுகள் வழங்கிவைப்பு

சமுக சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஒருவரைக் குடும்பத் தலைவராகக் கொண்ட, சிறுகைத்தொழில் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் குடும்பங்களுக்கு அக்கைத்தொழில்களை அபிவிருத்தி செய்ய உதவும் நோக்கோடு பண உதவிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (11) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெவ்வேறு கிராமசேவகர் பிரிவுகளைச் சேர்ந்த, கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட, குடும்பத்துக்குத் தலைமைதாங்கி கோழி வளர்ப்பு, நெல் குற்றல், தையல்வேலை போன்ற சிறுகைத்தொழில்களில் ஈடுபட்டுவரும் தேர்தெடுக்கப்பட்ட 5 குடும்பத் தலைவிகளுக்கு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனால் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.சிவாநந்தத்தின் பிரசன்னத்தோடு உதவிப்பணத்துக்கான காசோலைகள் வழங்கிவைக்கப்பட்டன.