சர்வதேச விஞ்ஞான தினம் - 2015' இலங்கை தேசிய விஞ்ஞான மன்றத்தினால் நடாத்தப்பட்ட அறிவியல் ஆய்வுத் திட்டத்திற்கான போட்டியில் சிவாநந்தா தேசிய பாடசாலையிலிருந்து பங்குபற்றிய மூன்று மாணவர்கள் தேசிய மற்றும் சர்வதேச விருதுகளுடன் பாடசாலைக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
சமாதானத்திற்கும் அபிவிருத்திக்குமான தினமாக 'நவம்பர் 10' அறிவிக்கப்பட்டு 'சர்வதேச விஞ்ஞான தினமாக கொண்டாடுவதற்கான பிரகடனத்தை 2001ம் ஆண்டு யுனெஸ்கோ வெளியிட்டது. இந்த நிகழ்ச்சித் திட்டங்களை இலங்கையில் அமுல்படுத்தும் பொருட்டு எமது நாட்டின் தேசிய பேரவையானது இலங்கை விஞ்ஞான மன்றத்தை நியமித்தது. 2004ம் ஆண்டு தொடக்கம் இலங்கையிலுள்ள பாடசாலைகளை உள்ளடக்கியதாக பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்களை விஞ்ஞான மன்றமானது நடாத்தி வருகிறது. இதில் 1000த்திற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் கலந்து கொள்கின்றனர்.
'சர்வதேச விஞ்ஞான தினம் - 2015' க்கான பிரதான நிகழ்வுகள் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கடந்த 09-11-2015 அன்று இடம்பெற்றது. இதில் இலங்கையிலுள்ள பாடசாலைகளிற்கிடையில் நடாத்தப்பட்ட அறிவியல் ஆய்வுத் திட்டத்திற்கான போட்டியில் பங்குபற்றி அதிசிறந்த ஆய்வுச் செயற்றிட்டங்களைச் சமர்பித்த 10 பாடசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு விருதுகளும் பணப் பரிசும் வழங்கப்பட்டன. இதில் மட்டுநகர் சிவாநந்தாவிலிருந்து திருமதி சுகுணேஸ்வரி மங்களேஸ்வரன் ஆசிரியை அவர்களின் சிறந்த நெறிப்படுத்தலின் கீழ் மாணவர்களான செல்வன் பத்மநாதன் துசிமயூரன், அமலநாதன் ஜெயந்தன் மற்றும் தேவபாலன் ஜனகன் ஆகியோர் “Cost effective saline irrigation” ' எனும் ஆய்வுச் செயற்றிட்டத்தை சமர்பித்திருந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் தேசிய ரீதியில் பங்குபற்றியிருந்த நிலையில் சிவாநந்தா மாணவர்களின் செயற்றிட்டம் அதிசிறந்த திட்டங்களுள் ஒன்றாக தெரிவுசெய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும் அவுஸ்திரேலிய நாட்டின் அரிசோனா ஸ்ரேட் பல்கலைக்கழகம் அதிசிறந்த மூன்று செயற்றிட்டங்களைச் தெரிவுசெய்து “Walton
Sustainability Solution Award”
எனும் உயர் விருதையும் வழங்கியது. இதனையும் சிவாநந்தா தேசிய பாடசாலை மாணவர்கள் பெற்று பிராந்தியத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
மேற்படி தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்ற மாணவர்களையும் அதனை சிறந்த முறையில் நெறிப்படுத்தி உரிய வழிப்படுத்தல்களை நல்கிய ஆசிரியரையும் வாழ்த்துகின்றனர் சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தினர்.
வெற்றிகள் , சாதனைகள் தொடரட்டும் -
மேற்படி தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்ற மாணவர்களையும் அதனை சிறந்த முறையில் நெறிப்படுத்தி உரிய வழிப்படுத்தல்களை நல்கிய ஆசிரியரையும் வாழ்த்துகின்றனர் சிவாநந்தா பழைய மாணவர் சங்கத்தினர்.
வெற்றிகள் , சாதனைகள் தொடரட்டும் -
சிவாநந்தா சிகரம் தாண்டி வளரட்டும்.
தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,
சிவாநந்தா பழைய மாணவர் சங்கம்.
தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,
சிவாநந்தா பழைய மாணவர் சங்கம்.


















