(படுவான் பாலகன்)
JICA நிறுவனத்தின் நிதியுதவியுடன் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கள
உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி பல்வேறு மாவட்டங்களிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எமது மட்டக்களப்பு மாவட்டத்திலும் உள்ள கள உத்தியோகத்தர்கள் தெரிவு செய்யப்பட்டு 1ம் கட்டம் நிறைவுற்றுள்ள அதேவேளை 2ம் கட்டமாகவும் கடந்த 15.10.2015 அன்று சத்துருக்கொண்டான் சர்வோதய வள நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்ட பயிற்சியானது இன்றுடன் (06) நிறைவுற்றது.
2ம் கட்ட பயிலுனர்களாக கலந்து கொண்ட கள உத்தியோகத்தர்களுக்கு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் திரு.எஸ்.ரங்கநாதன், மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு.ஆ.சுதாகரன், மாவட்ட திவிநெகும (சமுர்த்தி) இணைப்பாளர் திரு.மனோகிதராஜ், மாவட்ட சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அன்பழகன் குரூஸ், மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.ராஜ்பாபு, கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பதிவாளர் திரு.வே.நவீரதன் ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டு பயிற்சிகளை திறம்பட வழங்கியதுடன் பயிற்சி முடிவில் இசா இமாசாதோ (JICA Expert) அவர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களையும் வழங்கினார்.












