வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் காட்டுயானை தாக்குதலால் உடைமைகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்று பிரதேச செயலாளரினால் உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
இதில் உன்னிச்சை, பன்சேனை, பாவற்கொடிவச்சேனை ஆகிய கிராமங்களைச்சேர்ந்த அண்மையில் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி வீடுகள் சொத்துக்கள் பாதிக்கப்பட்ட 15 குடும்பங்களுக்கு மேற்படி உணவுப்பொருட்கள் வழங்கிவைககப்பட்டது.
வவுணதீவு அபிவிருத்தி நிதியத்தின் உதவியில் இவ் உணவுப் பெருட்கள் வழங்கப்பட்டது.
இவர்களுக்கான பொருட்களை பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் N.சிவநிதி மற்றும் வவுணதீவு அபிவிருத்தி நிதியத்தின் உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.












