தீபத்திருநாள் அல்லது ......தொடரும் கவிவரிகளில் தரும் செய்தி: கலாநிதி. சி.ஜெயசங்கர்

தீபங்கள் ஒளிர்க
தீயென நெஞ்சில்
தீபங்கள் ஒளிர்க
வெட்கத் தீயென
நெஞ்சில்
தீபங்கள் ஒளிர்க

முப்பாட்டனுக்கும் மூத்தவனை
வந்து வீழ்த்திச் சென்றவரை
வாழ்த்தி வரவேற்க

வரிசைக்கு வைத்த
விளக்கெரிப்பை
புத்தியைத் திரித்து
வைத்தனர் திருநாளாய் எமக்கும்

எரிக்கின்றோம் தீபங்கள்
வெடிவெடித்துக் கொண்டாடுகிறோம்
வாழ்த்துகிறோம்
வீழ்ந்தவனின் வாரிசுகள்



கலாநிதி.சி. ஜெயசங்கர்
நுண்கலைத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்