கொழும்பு விவேகானந்த சபையினால் அகில இலங்கை ரீதியாக நடத்தப்பட்டு வரும் இந்து சமய பாடப் பரீட்சை இம்முறை பிற்போடப்பட்டுள்ளது.
இந்து சமய பாடப் பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி நடத்தப்படவிருந்த போதிலும் அன்றைய தினம் உயர்தர மாணவர்களுக்கான கணினிப் பரீட்சை நடைபெறும் என கல்வி திணைக்களம் அறிவித்துள்ளமையினால் இந்த பரீட்சை எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு நடைபெறும் என விவேகானந்த சபை தெரவித்துள்ளது.













