கடந்த 04.11.2015ம் திகதியன்று திருக்கோயில் வைத்தியசாலைக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ ஹாபிஸ் நஸீர் அகமட் அவர்களும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் அவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ மு.இராஜேஸ்வரன் அவர்களும் விஜயம் செய்து வைத்தியசாலை அபிவிருத்தி வேலைகளை பார்வையிட்டதோடு அவ்வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவு ஒன்றினையும் ஆரம்பித்து வைத்தனர்.பின்பு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் வைத்தியசாலை அபிவிருத்தி குழுக்களாலும் பொதுமக்களாலும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.
மேலும் திருக்கோயில் வைத்தியசாலையை ஒரு ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு அண்மையில் மாகாண சபை உறுப்பினரினால் கிழக்கு மாகாண சபையில் தனி நபர் பிரேரணையை கொண்டுவந்து உரையாற்றியிருந்தார்.
திருக்கோயில் வைத்தியசாலையை ஒரு ஆதார வைத்தியசாலையாக தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன் அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சிக்கு பிரதேச மக்கள் மகிழ்ச்சியும், ஆதரவும் தெரிவித்து பொதுமக்களாலும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டார்.
















