தன்னாமுனை மைலம்பாவெளியில் விபத்து

(சுபஜன்)
ஏறாவூர் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு தன்னாமுனை மைலம்பாவெளி பிரதான வீதியில், நேற்று 10.11.2015 இரவு 10.30 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது.  கார் ஒன்று வீதியோரம் இருந்த வீட்டு வேலியில் மேதியுள்ளது. கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியது. சாரதியின் அதி வேகமும் , தூக்கமுமே இவ்விபத்திற்கு காரணமாகவுள்ளது. காரில் பயணித்தவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை,  இது குறித்து ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.