கிராமிய மட்ட காணி பயன்பாட்டு மாதிரி திட்டத்தின்கீழ் வவுணதீவில் பழமரக் கன்றுகள் வழங்கிவைப்பு

(சுகிவர்மன்)
கிராமிய மட்ட காணி பயன்பாட்டு மாதிரி திட்டத்தின்கீழ் காணி உபயோக கொள்கை திட்டமிடல் திணைக்களத்தின் நிதியுதவியில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் வவுணதீவு, பத்தரைக்கட்டை கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு விசவாய பழமரக் கன்றுகள்  இன்று 18ம் திகதி வழங்கிவைக்கப்பட்டது.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாபு மற்றும் நிருவாக உத்தியோகத்தர் ஜெ.ஜெயந்திரன், காணி பண்பாட்டு திட்டமிடல் உத்தியோகத்தர் என்.குமாரதாஸ் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மா,தோடை,பலா உள்ளிட்ட பழமரக் கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டது.