மாணவர்களுக்கான உள ஆரோக்கியத்தை வலுட்டுவதால் கற்றல் செயற்பாட்டை அதிகரித்தல் - மாணவர்களுக்கான கருத்தரங்கு

(குளத்தூர் ரவி)  
மாணவர்களுக்கான உள ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதன் ஊடாக கற்றல் செயற்பாடுகளை அதிகரிக்கச் செய்தல் எனும் தொனிப்பொருளில் மாணவர்களை விழிப்பூட்டும் கருத்தரங்கு நேற்று (5)மட்/மமே/கன்னங்குடா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் மட்டக்களப்பு மேற்கு வலயத்தின் ஆலோசனை வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.  

இக் கருத்தரங்கு  வவுனதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி Dr. இளங்கோ அவர்களது வழிகாட்டலில் இடம் பெற்றதோடு இதில் வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் அவர்களும், சிரேஸ்ட்ட வளவாளராக மட்டக்களப்பு போதண வைத்திய சாலையின் மகப்பேற்று வைத்தியநிபுணர் திருக்குமரன், Dr. இளங்கோ, மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் , மட்டக்களப்பு தொழுநோய் ஒழிப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் மனோகரன், ஆசிரிய ஆலோசகர் குனரெத்தினம், வவுனதீவுப் பொலிஸ் பிரிவின் சிறுவர்,பெண்கள் பிரிவின் அதிகாரி, வவுனதீவு பிரதேச செயலக, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டார்.